சூர்யாவின் சரித்திர படத்திற்கு இப்படியொரு தலைப்பா ?.... எகிறும் எதிர்பார்ப்பு !
சூர்யாவின் சரித்திர படத்தின் தலைப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் நடிப்பில் புதியதாக சரித்திர திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறது. இது சிறுத்தை சிவாவின் வழக்கமான திரைப்படம் போன்று இல்லாமல் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. அதாவது ஹாலிவுட் தரத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். வழக்கமான ‘வி’ என தொடங்கும் வகையில் தலைப்பை சிறுத்தை சிவா வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.