சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம்... இன்று அறிவிப்பு...

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம்... இன்று அறிவிப்பு...

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில்,  நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம்... இன்று அறிவிப்பு...

இந்நிலையில், இன்று மாலை இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story