சூர்யா படத்தில் இணையும் துல்கர் சல்மான்.. சூப்பர் ஹிட் காம்போவில் மிரட்டலாக உருவாகும் புதிய படம் !

suriya

சூர்யா - சுதா கொங்கரா இணையும் கூட்டணியில் நடிகர் துல்கர் சல்மான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கூட்டணியாக மாறியுள்ளது சூர்யா - சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சூரரைப்போற்று’ இயக்கினார். கொரானா காலத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடித்தளத்தில் வெளியான இப்படம் தமிழை தாண்டி பல மொழி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

suriya

பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன்பாபு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியிலும் இப்படம் ரீமேக்காகியுள்ளது. 

suriya

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சூர்யா மற்றும் சுதா கொங்கரா இந்த கூட்டணியில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story