சூர்யா பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. ‘கங்குவா’ மாஸ் அறிவிப்பு !

suriya

சூர்யா பிறந்தநாளையொட்டி ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த படத்தில் நடிகர் சூர்யா 5 தோற்றத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகி வருகிறது. 

suriya

யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இரு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்ராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.   ப்ரீயட் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது.

சூர்யா, திஷா பதானி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது. இதில் நடிகர் சூர்யா பங்கேற்று வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் 10 நாட்களில் முடிவடைவதாக இருந்தது. ஆனால் மேலும் 10 நாட்கள் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் ப்ரீயட் தொடர்பான காட்சிகள் கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. வரலாற்று தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் சூர்யா பங்கேற்று நடித்து வருகிறார். இன்னும் 10 நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற உள்ளது. 

 இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது பிறந்தநாளை வரும் 23-ஆம் தேதி கொண்டாடும் நிலையில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

 

Share this story