“மனம் உடைந்து விட்டது” - சூர்யா இரங்கல்

மலையாளத்தில் உண்டா, ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா, சாவேர் என பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் நிஷாத் யூசுஃப். ‘தள்ளுமாலா’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை வென்றார். தமிழில் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் கங்குவா படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். தூக்கில் தொங்கியபடி அவர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Heartbroken to hear Nishadh is no more! You’ll always be remembered as a quiet and important person of team Kanguva.. In our thoughts and prayers..! My heartfelt condolences to Nishadh’s family & friends. RIP pic.twitter.com/ClAI024sUe
— Suriya Sivakumar (@Suriya_offl) October 30, 2024
நிஷாத் யூசுஃபின் திடீர் மறைவு கேரள மற்றும் தமிழ்நாடு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் சூர்யா, “நிஷாத் இல்லை என கேட்டதும் என் மனம் உடைந்து விட்டது. கங்குவா படத்தின் அமைதியான மற்றும் முக்கியமான நபராக நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள். எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் எப்போதும் இருப்பீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.