சூப்பர் ஹிட் பாடலுக்கு பாலய்யாவுடன் நடனமாடிய சூர்யா
1730875551000
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலய்யா தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பல் வித் NBK 2 என்ற நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் கங்குவா படக்குழு கலந்துக்கொண்டனர். அதில் சூர்யாவிடம் நகைச்சுவையாக பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சூர்யா நடித்த வெற்றி படமாக அமைந்த கஜினி திரைப்படத்தில் இடம்பெற்ற சுற்றும் விழி சுடரே பாட்டுக்கு பாலய்யாவுடன் சூர்யா சேர்ந்து நடனம் ஆடினார் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.