‘கங்குவா’வில் மீண்டும் சிக்ஸ் பேக்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்...

kanguva

‘கங்குவா’ படத்துக்காக மீண்டும் 6 பேக் வைத்தது குறித்து சூர்யா பகிர்ந்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா.


‘கங்குவா’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில், மீண்டும் 6 பேக் வைத்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “இப்போது 49 வயதாகிறது. ‘கங்குவா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பாபி தியோல் சாருடன் சண்டையிட வேண்டும். அந்த சண்டைக் காட்சி மிகவும் நீளமானது. அதன் இறுதியில் சட்டையின்றி சண்டையிட்டால் எப்படியிருக்கும் என்று சொன்னார்கள். அப்போது படப்பிடிப்புக்கு இடையே 100 நாட்கள் டயட் திட்டம் தொடங்கினேன். அந்த நாட்களில் முடிந்தளவுக்கு சாப்பிடாமல் டயட் இருந்தேன்.

பார்வையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்க வேண்டும் என எண்ணினேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6 பேக் என்பது எனக்கே சவாலாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் சூர்யா. ‘கங்குவா’ படத்துக்கு முன்னதாக ‘ஏழாம் அறிவு’ படத்துக்காக சூர்யா 6 பேக் வைத்தது நினைவுக் கூரத்தக்கது

Share this story