இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவிய கதையில் சூர்யா

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவிய கதையில் சூர்யா 

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷூக்கு இது 100-வது திரைப்படமாகும்.  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவிய கதையில் சூர்யா 

இதனிடையே, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட கதையை தழுவி இப்படம் உருவாக உள்ளது. விரைவில் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story