சூர்யா தனக்கு நல்ல சகோதரர் - அமீர்

சூர்யா தனக்கு நல்ல சகோதரர் -  அமீர்

பருத்திவீரன் பிரச்சனை சில நாட்களாக உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.” என அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ரொம்ப பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்றும், நன்றி இல்லாமல் பேசியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க என கண்டித்து இருக்கிறார். களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சூர்யா தனக்கு நல்ல சகோதரர் -  அமீர்

இதனிடையே, வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை நடிகர் அமீர் உறுதி செய்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடன் நான் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளேன். சூர்யா எனக்கு நல்ல நண்பர் அதை தாண்டி நல்ல சகோதரர் என்று கூறியுள்ளார். 
 

Share this story