அடித்து நொறுக்கும் சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ்... 24 நேரத்தில் புதிய சாதனை !

kanguva

சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரை மாற்றவுள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. நடிப்பு என்றாலே எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் தாண்டி மாறுப்பட்டு நடித்து வருகிறார். அதுவும் ஒரு கேரக்டரில் அல்ல.. 5 கேரக்டரில். வரலாற்று பின்னணி உருவாகும் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள சூர்யாவின் ஒரு தோற்றமே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடித்து நொறுக்கும் சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ்... 24 நேரத்தில் புதிய சாதனை !

நேற்று சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் காடு, மலை தாண்டி வீரர்கள் மடிந்திருக்கும் நிலையில் ஒருவரை கங்கா (சூர்யா) கொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது சூர்யா வெறித்தனமாக லுக்கில் வந்து நலமா என கூறும் காட்சி மிரட்டலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ஏராளமான பார்த்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ 22 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூப்பில் பார்த்துள்ளனர். கிளிம்ப்ஸ் வீடியோ கிடைத்துள்ள இந்த வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  

 

Share this story