1500 ஆண்டுகளுக்கு முன் கதைக்களம் கொண்டது 'கங்குவா' - சூர்யா படம் குறித்து சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட் !

kanguva

 சூர்யாவின் 'கங்குவா' படம் குறித்து முக்கிய தகவல்களை இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் 'கங்குவா' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படம். இந்த படம் வெறும் கற்பனை படம் அல்ல. வலிமையான வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உருவாகிறது. 'கங்குவா' படத்தின் தலைப்புக்கு அர்த்தம் என்னவென்றால் நெருப்பாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்று பொருள். இது எனது கனவு திரைப்படம்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ள நாய், முகமுடி, குதிரை, கழுகு ஆகியவை இந்த படத்துடன் இணைந்திருக்கும். இந்த படத்தின் மூலம் புதிய உலகத்தையே உருவாக்குகிறோம். இந்த படத்தில் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளது. 3டியில் கண்டுகளிக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது என்று கூறினார். 

Share this story