புரமோஷன் நிகழ்ச்சியில் கங்குவா கதையை லீக் செய்த சூர்யா...

surya

 சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. பாலிவுட், டோலிவுட், மோலிவுட் எனப் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.surya

அந்த வகையில் கேரளா கொச்சியில் உள்ள ஒரு மாலில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சூர்யா. அப்போது படம் குறித்தும் கேரள ரசிகர்கள் குறித்தும் பேசிய அவர், கங்குவா படக் கதையைப் பற்றி சொல்வதாக கூறினார். பின்பு பேசிய அவர், “700 வருடங்களுக்கு முன்னாடி, ஒரு 4 தீவுகள் இருக்கிறது. அதில் ஒன்றான கங்குவா தீவில் தீ தான் கடவுள். அதே போல் இன்னொரு தீவில் தண்ணீர்தான் கடவுள், மற்றொன்றுக்கு ரத்தம். இந்த தீவுகளுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகள், அதை பற்றி சொல்வதுதான் படம். இது ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அதற்கு பின்னாடி நிறைய எமோஷன் இருக்கிறது. காதலின் உட்சபட்ச வெளிப்பாடு மன்னிப்பு. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த மன்னிப்பு தான் இந்த படத்தின் மையக்கரு. அதை வைத்து தான் கதையை விரிவுபடுத்தியுள்ளார்கள்” என்றார்.

Share this story