நியூ லுக்கில் அசத்தும் சூர்யா... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

suriya

சிறுத்தை சிவா படத்திற்காக நடிகர் சூர்யா புதிய லுக்கிற்கு மாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 வது படமாக உருவாகும் இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் 3டி படமாகும். 

suriya

இரு பாகங்களாக உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த படம் குறித்து தினந்தோறும் வெளியாகும் அப்டேட்டுகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

suriya

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

suriya

யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிசியாக நடைபெற்று வருகிறது. அதில் சூர்யாவின் ப்ரீயட் பகுதி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா புதிய தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏற்கனவே ஜிம்மில் வெர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story