வயநாடு நிலச்சரிவு : இதயம் நொறுங்கிவிட்டது என நடிகர் சூர்யா பதிவு

suriya

கேரளாவின் வயநாடு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 224 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. நிவாரண பணிகளில் ராணுவமும் ஈடுபட்டு வருகிறது. இக்கட்டான நிலையில் இருக்கும் கேரளாவுக்கு நிதி உதவு வழங்கும்படி முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்து இருக்கிறார். நடிகர் விக்ரம் முதல் ஆளாக 20 லட்சம் ரூபாயை நிவாரண பணிகளுக்காக வழங்கி இருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த சம்பவம் பற்றி சோகமாக பதிவிட்டு இருக்கிறார். தனது இதயம் நொறுங்கிவிட்டது என கூறியுள்ள  அவர் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கும் அரசு ஏஜென்சிகள் மற்றும் மக்களுக்கு தன் மரியாதையை செலுத்துவதாகவும் சூர்யா கூறி இருக்கிறார்.  


 

Share this story