'கனிமா' பாடலின் சூர்யா Rehearsal version வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

surya

'கனிமா' பாடலுக்கு சூர்யா ஆடிய ரிகர்சல் வீடியோவை 'ரெட்ரோ' படக்குழு பகிர்ந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் `ரெட்ரோ’ . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜ ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி  வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 அதைத்தொடர்ந்து  ”ரெட்ரோ’ படத்தின் ’கனிமா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை பாடி அதில் நடனமும் ஆடியுள்ளார்.  


இப்பாடலில் சூர்யா பதட்டத்துடன் நடனமாடியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், கதாப்பாத்திரத்திற்காக சூர்யா அப்படி ஆடியதாகவும், ரிகர்சல் செய்த பொது ஆடிய வீடியோவை 'ரெட்ரோ' படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் சூர்யா சிரித்தபடி நடனமாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.   

Share this story