பிரம்மாண்டமாக படமாகும் 'கங்குவா' பாடல்... மாஸ் காட்டும் சூர்யா !

kanguva

சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் பிரம்மாண்டமாக படமாகி வருகிறது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.  இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

kanguva

 யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று பிரம்மாண்டமாக படமாகி வருகிறது. இதில் ப்ரீயட் பகுதியில் இடம்பெறும் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். சூர்யாவின் கெரியரில் மிக முக்கியமான பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Share this story