கங்குவாவாக மிரட்டும் சூர்யா.. அசத்தலான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

kanguva

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா‘ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் மிரட்டலான உருவாகி வருகிறது ‘கங்குவா’. சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

kanguva

இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகிறது.

kanguva

நேற்று நள்ளிரவு சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் காடு, மலை தாண்டி வீரர்கள் மடிந்திருக்கும் நிலையில் ஒருவரை கங்கா (சூர்யா) கொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது வெறித்தனமாக லுக்கில் வரும் சூர்யா, நலமா என கூறும் காட்சி மிரட்டலாக உள்ளது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story