சூர்யாவிற்கு வில்லனாவது இந்த நடிகரா ?.. வியப்பை ஏற்படுத்தும் ‘கங்குவா’ அப்டேட் !

kanguva

‘கங்குவா’ படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘கங்குவா’. ப்ரீயட் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகி வருகிறது.  இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

kanguva

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். 

kanguva

ப்ரீயட் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. இதையடுத்து சில முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் வில்லனாக நடிகர் நட்டி நட்ராஜ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. வித்தியாசமான நடிகராக இருக்கும் நட்டி, தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். தற்போது ‘கங்குவா’ படத்தில் அவர் நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story