‘கனவு படத்தின் பாதியை முடித்துவிட்டேன்’ - ‘கங்குவா’ குறித்து அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா !

ganguva

தனது கனவு படமான ‘கங்குவா’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் இயக்குனரான இருப்பவர் சிறுத்தை சிவா. அவர் இயக்கத்தில் வெளியான சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை. அவரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த படத்தில் முதல்முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ganguva

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடைசியாக கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குனர் சிறுத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவா தெரிவித்துள்ளார். அதில், தனது கனவுப்படமான ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. இதையடுத்து நாளை முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது என்று கூறியுள்ளார். 


    

Share this story