சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்தின் புது அப்டேட்

retro

சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதில் ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் குணமாகி அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து முன்னதாக கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல நிறுவனமான டீ - சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 


முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது அந்த டீசரின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் பாடல் உரிமையை வாங்கிய டீ - சீரிஸ் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ் டைட்டில் டீசரும் மீண்டும் இந்த சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Share this story