காளைகளின் பயிற்சிகளுக்காக பல கோடி செலவு.... அதிர வைக்கும் 'வாடிவாசல்' அப்டேட்.

vaadivaasal

சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா, பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

vaadivaasal

இ‌ந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.‌ 'கங்குவா' படத்திற்கு பிறகு நிச்சயம் 'வாடிவாசல்' படத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து புதிய தகவல்களை இயக்குனர் கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார். 

vaadivaasal

அதில் கொரானா காலம் முதல் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. அப்போதிலிருந்த இந்த படத்தில் நடிக்கும் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரிகிறது. தற்போது 'வாடிவாசல்' படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த படத்தில் நடிக்கும் காளைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுமார்  ‌‌‌‌‌‌1.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 

'வாடிவாசல்' படத்தில் முக்கிய பங்கு வகிக்க இருப்பது காளைகள். அதனால் அவைகளுக்கு நன்கு பயிற்சி அளித்து நடிக்க வைக்கவுள்ளோம். இந்த படத்தில் காளைகளுக்காக மட்டுமே பாதி பட்ஜெட்டை செலவிடப்படுகிறது. சூர்யாவும் இந்த படத்திற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Share this story