சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி... மதுரையில் படப்பிடிப்பு என தகவல்...
1700215263239
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷூக்கு இது 100-வது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

