‘கார்த்திகேயா’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா.. நான்கு வேதங்களை வைத்து உருவாகிறது !

SURIYA

தெலுங்கு இயக்குனர் சந்தூ மொண்டெட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா பல கெட்டப்புகளில் நடித்து வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியானது. இந்த படத்தை சூர்யா அடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SURIYA

அந்த வகையில் வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா, லோகேஷூடன் ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட் இயக்குனராக இருக்கும் சந்தூ மொண்டெட்டியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சந்தூ மொண்டெட்டி, ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். 

SURIYA

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் சந்தூ மொண்டேட்டி, இந்த படம் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது. ரிக், யஜுர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. சூர்யாவின் கால்ஷீட்டை பொறுத்து இந்த படம் தொடங்கும் என கூறினார். 

 

 

 

Share this story