வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி உடன் இணையும் சூர்யா..!

surya

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. இதனிடையே, தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.

surya
இந்தக் கூட்டணி படத்தினை யார் தயாரிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற விவரங்கள் எதுவுமே வெளியாகவில்லை. ஆனால், இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் வெங்கி அட்லுரி. அதன் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தி்னை இயக்கவுள்ளார்.

வெங்கி அட்லுரி படங்கள் என்றாலே, அதனை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கும். ஆகையால் சூர்யா படத்தினை அந்நிறுவனமே தயாரிக்கவுள்ளதா என்பது விரைவில் தெரியவரும். மேலும், ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு வெங்கி அட்லுரி படமா, அல்லது ‘வாடிவாசல்’ படத்துக்கு பின்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்.

Share this story