சூர்யாவிற்காக களமிறங்கும் ‘அவதார்’ படக்குழு... மிரட்டும் அப்டேட்

vaadivasal

 சூர்யாவின் படத்தில் ஹாலிவுட் படக்குழு பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். 

vaadivasal

 சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகையும் நடைபெற்றது. அதனால் இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தற்போது வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தை முடித்துள்ளதால் இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘வாடிவாசல்’ கிராபிக்ஸ் பணிகளுக்காக வீடா டிஜிட்டல் நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே அவதார், கிங்காங், காட்ஃசில்லா, மார்வல் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் உலக சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

Share this story