சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு... . 'கங்குவா' விமர்சனம் என்ன?

kanguva

கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள கங்குவா விமர்சனம் குறித்து இந்த செய்தியில் காணலாம். சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.


சூர்யா திரை வாழ்வில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக ’கங்குவா’ உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் சிவா இயக்கத்தில் இவ்வளவு பிரமாண்ட படமா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருந்தனர். சூர்யா கங்குவா, ஃபிரான்சிஸ் என இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கங்குவா படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவை மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

null




சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கடைசி திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. அதற்கு பிறகு ’விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு பிரமாண்டமான சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. கங்குவா வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில் சமூக வலைதளங்களில் கங்குவா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் பார்த்தவர்கள் கங்குவா விமர்சனங்களை சமூக வலைதளத்தில் அதிகாலை பதிவிட்டனர். கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடிப்பு தூணாக தாங்கி பிடிக்கிறது எனவும், இது சூர்யா திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.



மேலும் கங்குவா திரைப்படம் பிரமாண்டத்திற்காகவும், விஷ்வல் காட்சிகளுக்காகவும் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் எனவும், படத்தின் கதையை விட திரைக்கதை நன்றாக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 2000 கோடி வசூல் பெறும் என சமீபத்திய நேர்காணலில் கூறியிருந்தார். கங்குவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this story