சூர்யாவின் முதல் பாலிவுட் திரைப்படம்.. உறுதி செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்..!

நடிகர் சூர்யா தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை பிரபல பாலிவுட் இயக்குனர் சமீபத்தில் உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சூர்யா நடித்த ’கங்குவா’ என்ற திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ உள்ளிட்ட சில படங்களில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் சமீபத்தில் பேட்டி அளித்த போது, தனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.ஏற்கனவே சூர்யா நடிப்பில், ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் ’கர்ணா’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்தை தான் அவர் தற்போது குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, சூர்யாவின் பாலிவுட் திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.