சூர்யாவின் கங்குவா : சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்..!

kanguva

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தற்போதே படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. சூர்யா உட்பட படக்குழு அனைவரும் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.  



இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு செய்ய இருக்கின்றது. தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் பான் இந்திய படம் கங்குவா என்பதால் இப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு மிகவும் கவனமுடன் உள்ளது. நினைத்தபடி இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றால் வசூலில் இதுவரை தமிழ் படங்கள் செய்யாத சாதனைகளை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், கங்குவா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம்  2 மணி நேரம் 34 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story