கங்குவா :வெளியான புது ரிலீஸ் தேதி அப்டேட்
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
The Battle of Pride and Glory, for the World to Witness ⚔🔥#Kanguva's mighty reign storms screens from 14-11-24 🤎#KanguvaFromNov14 🦅 @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations… pic.twitter.com/de3yYAL0BI
— Studio Green (@StudioGreen2) September 19, 2024
null
இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாக உள்ளதால், ‘கங்குவா’ தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.