சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் 2ஆம் பாடல் விரைவில்...
1741525372668

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் கண்ணாடி பூவே என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், 'ரெட்ரோ' படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும், அந்த பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.