சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...
1740752759000

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் வைரலானது. தற்போது இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.