சூர்யாவின் 'ரெட்ரோ' வெளியானது.. ரசிகர்கள் கொண்டாட்டம்...!

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் 'ரெட்ரோ'.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜ ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது./
தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கினர். ரெட்ரோ' வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகளில் சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.