ஓ.டி.டி.யில் வெளியாகும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம்

suriyas saturday
நானி நடித்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் டிவிவி நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது. 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் 26ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.


 

null


 

Share this story