சூர்யா 45 படத்திற்கு புதிய இசையமைப்பாளரை அறிவித்த படக்குழு!

surya 45

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடெக்‌சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடையில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், தற்போது அந்த படத்தை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை பொள்ளாச்சியை அடுத்து உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. அதோடு கோவையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகத் தகவல் வெளியானது. லப்பர் பந்து படம் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற சுவாசிகா இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்த நிலையில் சூர்யாவின் 44 பட இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பதிவில், சாய் அபியங்கர் இப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளதை அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும்  ராகவா லாரன்சின் ‘பென்ஸ்’ படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கவுள்ளாத அப்படக்குழு முன்பு தெரிவித்திருந்தது. அதற்கு முன்பு சாய் அபியங்கர் பாடி இசையமைத்திருந்த ‘கட்சி சேர...’ மற்றும் ‘ஆச கூட...’ ஆகிய ஆல்பம் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது

Share this story