"சீன் படத்தின் மூலம் ஜித்து மாதவன் ஒரு வித்தியாசமான உலகத்தையே உருவாக்கியுள்ளார்"-சூர்யா
சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடித்துள்ள படம் ‘சீன்’. இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. படம் குறித்து சூர்யா பேசியது: நான் நடித்த ‘காக்க காக்க’, ‘சிங்கம்’ போன்ற முந்தைய தீவிரமான போலீஸ் திரைப்படங்களோடு இந்த ‘சீன்’ படத்தை ஒப்பிட வேண்டாம். இது முற்றிலும் மாறுபட்ட, நகைச்சுவை நிறைந்த ஒரு ஜாலியான போலீஸ் கதையாகும். நாம் எப்போதுமே நமது மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் நல்லதாக இருந்தால், நாம் நினைக்கும் நல்ல விஷயங்கள் நிச்சயமாக ஒரு நாள் நம் வாழ்வில் நடக்கும். அதற்கு இந்தத் திரைப்படமே எனக்கு ஒரு சிறந்த உதாரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நஸ்ரியா திரையில் தனது மாயாஜால நடிப்பால் அசத்தியிருக்கிறார். இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மனதுக்குள் நான் ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது இந்த ‘சீன்’ படம் மூலமாக இப்போது நிறைவேறியிருக்கிறது. பொதுவாக கதைக் கேட்கும்போது நான் மிகவும் அமைதியாகக் கவனிப்பேன். ஆனால், ஜித்து மாதவன் இந்த படத்திற்காகக் கதை சொல்லத் தொடங்கிய 5-வது நிமிடத்திலிருந்தே நான் சிரிக்கத் தொடங்கிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ஜித்து மாதவன் ஒரு வித்தியாசமான உலகத்தையே உருவாக்கியுள்ளார்

