காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ள 47வது படம் -என்ன டைட்டில் தெரியுமா?

surya

சூர்யாவின் 47வது படத்தை மலையாள படவுலகை சேர்ந்த ஜித்து மாதவன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சீன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நஸ்ரியா, நஸ்லென் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். விறுவிறுப்பாக நடந்துவந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்துக்கு ‘சீன்’ என தலைப்பிட்டு அதற்கான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சுசின் ஷியாம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். திராவிட் செல்வம் வசனம் எழுதியுள்ளார். வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த ஆண்டு சூர்யாவின் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் வெற்றிபெற்ற நிலையில் அவர் ஹாட்ரிக் வெற்றி தருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Share this story