ட்ராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் -யார் தெரியுமா?

dragon
தமிழில் ‘கருப்பு’, ‘சூர்யா 46’, ‘சூர்யா 47’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார், சூர்யா. இதில் ‘கருப்பு’ படம் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு திரைக்கு வரும் என்று, இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். ‘சூர்யா 47’ படத்தில், மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா நடிக்கிறார். இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் ‘காட் ஆஃப் லவ்’ என்ற படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்திடம் ஒரு கதை சொல்லியிருந்தார்.
கதை பிடித்து இருந்தாலும், அப்படம் குறித்து எந்த தகவலையும் ரஜினிகாந்த் வெளியிடவில்லை. எனவே, ரஜினிகாந்துக்கு சொன்ன கதையை சூர்யாவிடம் சொல்லி ஓ.கே செய்துள்ளார், அஷ்வத் மாரிமுத்து. இது பக்கா கமர்ஷியல் அம்சங்களுடன், ‘அயன்’ படத்தை போல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக தமிழில் ‘ஓ மை கடவுளே’, தெலுங்கில் அதன் ரீமேக்கான ‘ஓரி தேவுடா’, தமிழில் ‘டிராகன்’ ஆகிய படங்களை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்..

Share this story