மும்பைக்கு ஓய்வெடுக்க சென்ற நடிகர் சூர்யா- சரியாக நடக்க கூட முடியாமல் செல்லும் வீடியோ வைரல்.

photo

சரியாக நடக்க கூட முடியாமல் தனது ,மனைவி ஜோதிகாவுடன் சூர்யா மும்பைக்கு ஓய்வெடுக்க செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.


நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்து சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சூர்யாவும் தான் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளம் மூலமாக கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் நடக்க கூட முடியாமல் நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story