சூர்யா - ஜோதிகா வீட்டில் செம்ம விருந்து... யாருக்கு தெரியுமா..?

சூர்யா- ஜோதிகா தம்பதிகள் வீட்டில் நடந்த விருந்தில் த்ரிஷா உள்பட சில திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது வீட்டில் விருந்து வைத்து சக நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில், சூர்யா - ஜோதிகா வீட்டில் நடந்த விருந்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்ட புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி உள்ளது.
"ஒரு அழகான மதிய உணவு! ஜோதிகாவை நாங்கள் சந்தித்தோம். நல்ல உணவுடன், நல்ல நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது கழித்தோம்," என்று இந்த விருந்து குறித்து த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த விருந்தில் ராதிகா சரத்குமார், நடன இயக்குனர் பிருந்தா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், தொகுப்பாளர் ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
குறிப்பாக, இந்த விருந்தினர்களுடன் சூர்யா எடுத்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத் தொகுப்பில் ரம்யா கிருஷ்ணனை த்ரிஷா கட்டிப்பிடித்து இருக்கும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.