'என்ன நான் மும்பையில் செட்டில் ஆயிடேனா!'- உண்மையை உடைத்த ‘சூர்யா’.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பேக் டு பேக் படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி மும்பை சென்று வருவதாகவும், அங்கு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த தகவல் குறித்த உண்மையை  வெளியிட்டுள்ளார் சூர்யா.

photo

சமீபத்தில் நடந்த ரசிகர்களுடனான உரையாடலின் போது நடிகர் சூர்யாவிடம் மும்பைக்கு அடிக்கடி சென்று வருவது குறித்தும், வீடு வாங்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சூர்யா தன்னுடைய பிள்ளைகள் மும்பையில் தங்கி படித்து வருவதால்தான் அடிக்கடி செல்வதாக விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ‘நான் எங்கையும் போகலப்பா, சென்னையிலதான் இருக்கேன்’ என அவரது ஸ்டைலில் பதில்கொடுத்து வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.  சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் சிறுத்தைசிவாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அடுத்ததாக சுதா கொங்கராவுடன் ஒரு படம், தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், லோகேஷுடன் இணைந்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மைய்யமாக வைத்து ஒரு படம், இரும்புகை மாயாவி என தொடர்ந்து பிசியான அட்டவணையை வைத்துள்ளார் சூர்யா.

Share this story