ரெட்ரோவுக்கு அடுத்து நடிக்கும் படம் -ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா .

surya

நடிகர் சூர்யா தனது 45 வது படமாக ஆர் ,ஜே ,பாலாஜி டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இயக்குனர் பாலாஜி இதற்கு முன்பு மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது .இந்த படத்தில் அவருடன் நயன் தாரா நடித்துள்ளார் .இப்படம் ஒரு வெற்றி படம் 
ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்க முடிவெடுத்துள்ளனர் 
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் தயாராகி விட்டதாகவும் அந்த டீசர் விரைவில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது .

Share this story