"அந்த சம்பவத்துக்கு பிறகுதான் நடிப்பில் எனக்கென்று ஒரு பாதையை உருவாக்கினேன்"-சூர்யா
சூர்யா, ஒரு பேட்டியில், ‘நானும் ஒரு நடிகனாவேன் என்று, நடிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை எனக்கு தெரியாது. அப்பா சிவகுமாரின் நடிப்புத்திறமை குறித்து அனைவருக்கும் தெரியும். நினைவாற்றலை அதிகப்படுத்த அவர் எனக்கு நிறைய பயிற்சிகள் அளித்துள்ளார். ஆனால், என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நண்பர் ஒருவரது குடும்ப திருமணம். அவரது உறவினர்களில் ஒருவர் அரசியல்வாதி. அவருக்கு பத்திரிகை கொடுக்க சென்றபோது, அவருடன் நானும் சென்றேன். அரசியல்வாதி என்னை பற்றி விசாரித்தார். `பார்ப்பதற்கு சிவகுமார் போலவே இருக்கிறாய். அவர் எப்படி நடிப்பாரோ அதுபோலத்தான் நீயும் நடிப்பாய் அல்லவா.
நாங்கள் மீண்டும் அதைத்தான் பார்க்க வேண்டும்’ என்பது போல் சொன்னார். அது எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று முதல் நான் அப்பாவின் படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நான் அவரது டிஎன்ஏ என்பதால், அவரைப்போல் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவரது பாவனைகளோ, குரல் பிரதிபலிப்போ எனக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். அவரது தாக்கம் என் நடிப்பில் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது எனக்கு 23 வயது. இந்த சம்பவத்துக்கு பிறகுதான் நடிப்பில் எனக்கென்று ஒரு பாதையை உருவாக்கினேன்’ என்றார்.

