"சூர்யாவே பெஸ்ட் கிஃப்ட் தான்.." .. ஜோதிகா கொடுத்த கியூட் பதில்...!

ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சுமார் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரையுலகில் நட்சத்திர ஜோடிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சூர்யா மற்றும் ஜோதிகா இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா அவரது கணவர் சூர்யா பற்றி பேசிய விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சோஷியல் மீடியாவில் ரசிகர் ஒருவர், சூர்யா உங்களுக்கு கொடுத்த சிறந்த பரிசு என்ன என ஜோதிகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா, சூர்யாவே எனக்கு ஒரு சிறந்த பரிசு தான் என பதிலளித்திருக்கிறார்.