கவுஹாத்தி காமாக்யா கோவிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்!

surya

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் அஸ்ஸா மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.  

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா , ஜோதிகா இருவரும் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

 அந்த போட்டோக்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பழமையான இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் ஒன்றாகும், இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வந்து வணங்குவது வழக்கம். அப்படி சக்தி வாய்ந்த காமாக்யா கோவிலில் தான் கணவன் மனைவி இருவரும் மனம் உருகி பிரார்த்தனை செய்துள்ளனர்.

Share this story