சூர்யாவின் கங்குவா : அண்ணன் படத்தில் இணைகிறாரா கார்த்தி?
சகோதரர்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
As per VP,
— AmuthaBharathi (@CinemaWithAB) July 22, 2024
- #Suriya & #Karthi to collaborate together in #Kanguva🤯🔥
- Karthi will appear at the end of the movie, which will be a lead to Part-2🥵
- His portions are going to be shoot soon⌛
If this combo happens, the screens are surely going to explode 💣 pic.twitter.com/XF9yRTCpQO
இந்நிலையில், கங்குவா படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அது, கங்குவா படத்தின் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.