சூர்யாவுடன் மமிதா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

surya

40 வயது ஆணை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜு நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. தேசிய விருது பெற்ற வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தில் சூர்யா மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். முன்னதாக தமிழில் வெளியான ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’, ‘கர’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, அனைவரும் விரும்பி ரசிக்கும் ஹீரோயினாக மமிதா பைஜு மாறினார். தற்போது ஒரே மாதத்தில் 3 படங்கள் திரைக்கு வருவது, அவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்துள்ளது.
விஜய்யுடன் அவர் நடித்த ‘ஜனநாயகன்’ படம்  திரைக்கு வந்துள்ளது. சூர்யாவுடன் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம், வரும் ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘டியூட்’ படத்துக்கு பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

Share this story