ரயில்களில் சூர்யா போஸ்டர்... புரமோஷன் பணிகளை தொடங்கிய 'ரெட்ரோ' படக்குழு...

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ரோ’ . சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.‘ரெட்ரோ’ திரைப்படம், மே மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
All aboard for the #Retro ride 🚆🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 15, 2025
Spot #TheOne on the rails and tag us ⚔#LoveLaughterWar #RetroFromMay1@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art #MayaPandi… pic.twitter.com/FYj4JPmtVJ
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக, தாம்பரத்தில் உள்ள மின்சார ரயிலில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் முழுமையாக ஒட்டப்பட்டு, வேறு லெவலில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த புரமோஷன் முறையானது வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கான வீடியோவை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.