‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து நடந்த நிலையில் சூர்யாவின் பதிவு வைரல்.

photo

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் திடீரென விபத்து ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து நூல் இழையில் தப்பிய சூர்யா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

photo

வரலாற்று கதையம்சம் கொண்ட கங்குவா படத்தின் படப்பிடிப்பு  பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்று வழக்கம் போல ஷூட்டிங் துவங்கியதும் திடீரென எதிர்பாராத விதமாக ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டை மீது மோதியுள்ளது. இதனால் சூர்யாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இன்றைக்கான படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் விபத்திலிந்து நூல் இழையில் தப்பிய சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “அன்பான நண்பர்கள், அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். இப்போது நன்றாக உணர்கிறேன். உங்களுக்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

Share this story