முழுபடமாக உருவாகிறது ரோலக்ஸ் கதாப்பாத்திரம்!... – இதோ சூர்யாவின் அடுத்தடுத்த பட லிஸ்ட்.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேன்ஸ் மீட் அப்பின் மூலம் ரசிகர்களுக்கு தானது அடுத்தடுத்த பட லிஸ்டை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

photo

அந்த லிஸ்ட்டில் முதலாவதாக வரலாற்று பின்னணியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் உள்ளது. “நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

photo

சூர்யா 43: சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா43 என்ற பெயருடன் அழைத்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

photo

வாடிவாசல் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள படம் வாடிவாசல். இந்த படத்தில் அறிவிப்பு வந்து 3 ஆண்டுகள ஆனபோதிலும் படப்பிடிப்பு நடந்தபாடில்லை. இது குறித்தும் பதிலளித்த சூர்யா ‘விடுதலை2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படம் தொடங்கும் என்றார்.

photo

ரோலக்ஸ்: விக்ரம் படத்தில் கடைசி சில நிமிடங்கள் வந்து சென்ற கதாப்பாத்திரம் தான் ரோலக்ஸ். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அக்கதாப்பாத்திரத்தை மைய்யமாக வைத்து முழு படத்தையும் எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக கூறப்பட்ட கதையும் தமக்கு பிடித்துவிட்டதாக அவர் கூறினார்.

 இரும்புக்கை மாயாவி: சூர்யா கொடுத்த லிஸ்டில் கடைசியாக இருப்பது இரும்புக்கை மாயாவி திரைப்படம் இந்த தகவலகளை அவர் கூறியதும் ரசிகர்கள் உற்சாகத்தில் திக்குமுக்காடிபோய்யுள்ளனர்.

Share this story