நன்றி விஜய் சார்; என்னுடைய இந்த பயணத்தில் உங்களது ஆதரவு மறக்கவே முடியாதது! - சூர்யா சேதுபதி

நாளை ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய்சேதுபதி மகன்.
விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி. இதுதொடர்பாக ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சூர்யா சேதுபதி, “நன்றி விஜய் சார்; என்னுடைய இந்த பயணத்தில் உங்களது ஆதரவு மறக்கவே முடியாதது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.